வடமாகாண சபை உறுப்பினர் மயூரனின் பதவிக்காலம் நிறைவு

ekuruvi-aiya8-X3

mayuவடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் மாகாண சபை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்து சபையில் இருந்து வெளியேறினார்.

வடமாகாண சபையின் 100வது அமர்வு தற்போது பேரவையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பாக சுழற்சி முறை ஆசனத்தில் வடமாகாண சபை உறுப்பினராக கடந்த வருடம் மயூரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அமர்வின் போது வட மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்த செ.மயூரன் சபையில் இருந்து வெளியேறினார்.

குறித்த சுழற்சி முறை ஆசனத்தில் எதிர்வரும் ஒரு வருடத்திற்கு யாழ். வணிகர் கழக தலைவர் ஆர்.ஜெய்சேகரம் தமிழரசு கட்சி சார்பாக நியமிக்கப்படலாம் என்றும் இலங்கை தமிழரசு கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment