மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 இந்தியாவில் வெளியானது

ekuruvi-aiya8-X3

Daily_News_7838665246964மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அந்நிறுவன இணையதளத்தில் பதிவான செல்ஃபி 2 முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் நிறுவன இணையதளத்தில் சில தினங்களுக்கு முன் பட்டியலிடப்பட்ட செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. செல்ஃபி ஸ்பெஷல் ஸ்மார்ட்போனாக உருவாக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் எச்டி 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் செல்ஃபி 2 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழ்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர் வசதி வழங்கப்பட்டுள்ள செல்ஃபி 2 ஸ்மார்ட்போனின்

micromax-selfie-2._L_styvpf

முழு சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் 1280×720 பிக்சல் IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
* 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர்
* 3 ஜிபி DDR3 ரேம்
* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
* டூயல் சிம் ஸ்லாட்
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* சோனி IMX135 சென்சார், f/2.0 அப்ரேச்சர்
* 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்,
* OV8856 சென்சார், f/2.0 அப்ரேச்சர்
* 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
* கைரேகை ஸ்கேனர்
* 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 b/g/n,
* ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ்
* 3000 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்டு 1-ம் தேதி) முதல் மைக்ரோமேக்ஸ் செல்ஃபி 2 விற்பனை துவங்குகிறது.

Share This Post

Post Comment