மது திருடன் கூண்டில் அடைக்கப்பட்டார்

ekuruvi-aiya8-X3

oppasamநியூயோர்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்த ‘ஒப்பசம்’ என்ற மிருகம் மது போத்தல்களை திருடி குடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ‘ஒப்பசம்’ என்ற அரிய மிருகம் காணப்படுகிறது. இது மரங்களில் வாழ்கிறது. அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இது உள்ளது.

இது குறும்பு தனம் மிக்கது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது. இந்த நிலையில் இது நியூயோர்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் கடை மூடப்பட்ட பின் முழு போத்தல் மதுவையும் குடித்தது. போதை தலைக்கேறியதும் ரகளையில் ஈடுபட்ட அந்த மிருகம் போத்தல்களை உடைத்து மதுக்கடையை சூறையாடியது.

தற்போது இந்த விலங்கை பிடித்து சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். அதன் காரணமாக அது அமெரிக்க மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.

Share This Post

Post Comment