அடுத்த ஆண்டில் சில மாதங்களுக்கு “பிக் பென்” கடிகாரம் ஒலிக்காது

ekuruvi-aiya8-X3

londonஉலகின் மிகப்பெரிய கடிகாரங்களுள் ஒன்றான “பிக் பென்” கடிகாரம் அடுத்த ஆண்டின் சில மாதங்களுக்கு ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்­பெற்ற கடி­கா­ர­மான லண்டன் “பிக் பென்” கடி­காரம், லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு. நான்கு பக்கங்கள் கொண்ட மணிக் கூண்டுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்.

இந்த மணிக்கூண்டு கடந்த 1858-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. லண்­ட­னி­லுள்ள பிரிட்டன் நாடா­ளு­மன்ற வளா­கத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்டுள்ள “பிக் பென்” கடி­காரக் கோபுரம் 156 ஆண்டுகால பழை­மை­யா­னது.

இக் ­கோ­பு­ரத்தின் நான்கு திசை­க­ளிலும் உள்ள கடி­கார முகப்­புகள் தலா 23 அடி விட்­ட­மு­டை­யவை. கோபுரத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள, மிகப்பெரிய மணியின் ஓசை, லண்டனின் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிக் கூண்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு இதற்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், இந்த கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய மராமத்து பணிகள் செய்யப்படவுள்ளன. எனவே, 365 நாட்கள் 24 மணிநேரமும் இயங்கி வந்த இந்த கடிகாரம், அடுத்த ஆண்டில் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படவுள்ளது. மேலும், சுமார் 35 மில்லியன் டாலர்கள் பராமரிப்புப் பணிகளுக்காக செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment