மாறாத வடுவையும், ஆறாத துயரத்தையும் தந்துள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை – சிவசக்தி ஆனந்தன்

ekuruvi-aiya8-X3

Mulliகொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலையில் அவர்களது உறவினர்கள் இருப்பதாக தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் அவர் எழுதிய ஆக்கம் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சுமாராக 1,50,000க்கும் மேல் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அது சமூக கட்டமைப்பில் பாரிய குலைவையும் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆசியாவிலேயே கருவில் இருந்து கல்லறைவரை ஒருவரின் விபரக் கோவையை கிரமமான முறையில் பதிவுசெய்து வைத்திருக்கும் நாடு இலங்கை என்ற பெருமை பேசப்படுவதுண்டு. அப்படியென்றால் அப்பதிவேடுகளின் துணைகொண்டு, மேற்படி கொல்லப்பட்ட அனைவரின் விபரங்களை அரசினால் இலகுவில் திரட்டி வெளியிட முடியும். ஆனால் அதற்கு இந்த அரசு தயாரில்லை என்பது வேதனைக்குரியது என்றும் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முள்ளிவாய்க்கால் பற்றிய அனைத்து அநீதிகளும் களையப்படும் என்றும் அவ்வாறு மக்களைக் கொன்றவர்கள் மீது விசாரணை நடத்தி கண்டிக்கப்படுவார்கள் என்றும் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் அவ்வாறு பதவிக்கு வந்ததும் அதனால் நன்மை அடைந்தது தமிழ் மக்களை பாதித்த தரப்பினரே தவிர தமிழ் மக்கள் அல்ல என்றும் கூறினார்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைக்குள்ளான தமது இனிய உறவுகளுக்கு நெஞ்சார அஞ்சலி கூறுவதுடன் அவர் தம் இனிய உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளோம் என்ற துயரை இத்துயர் தோய்ந்த நினைவுநாளில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment