மிருசுவில் படுகொலையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் மேன்முறையீட்டு விசாரணை ஏற்பு!

ekuruvi-aiya8-X3

sunil-rathnayake1மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேன்முறையீட்டு மனுவை மேல் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் நாள், மிருசுவில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற அப்பாவிப் பொதுமக்கள் எட்டுப்பேர் படுகொலைசெய்யப்பட்டு மலசலக் குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்.

குறித்த மக்களில் ஒருவர் தப்பிச்சென்று அடையாளம் காட்டியதில் இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க குற்றவாளியென அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள் குறித்த இராணுவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுனில் ரத்நாயக்க சார்பில் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நேற்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், எதிர்வரும், ஜூன் 5, 6,7, 12, 13, மற்றும் 14ஆம் நாள்களில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

Share This Post

Post Comment