ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை குழு அமைக்கப்படும் – சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிப்பேன் – ஓ.பன்னீர்செல்வம்

ekuruvi-aiya8-X3

OPSமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு; அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜினாமாவை திரும்பப்பெற வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக வாபஸ் பெறுவேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தீபா ஜெயக்குமாரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருக்கிறது எனவும் அவர்கள் தன்னை தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் எனவும் தெரிவித்த பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தனது பலத்தை நிரூபிப்பேன் எனத் தெரிவித்தார்.

Share This Post

Post Comment