2016ம் ஆண்டில் 87 பாதுகாப்பு படை வீரர்கள் மரணம்

Facebook Cover V02

Army_Ind_Liveday-450x254காஷ்மீரில் கடந்த ஆண்டு மிக முக்கிய தீவிரவாதிகளான ஹிஸ்முல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த பர்ஹான் வானி உள்பட பலர் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும் 165 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி வரை மட்டும் பாதுகாப்பு படை வீரர்கள் 87 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்பு அதிக வீரர்கள் 2016ம் ஆண்டு இறந்துள்ளனர்.

2008ம் ஆண்டு 90 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 2012ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மிக குறைந்து 17 ஆக இருந்தது. 2013ம் ஆண்டு உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.

2014ம் ஆண்டு சற்று குறைந்து 51 ஆகவும், 2015ம் ஆண்டு 41 வீரர்களும் பல்வேறு சம்பவங்களில் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2016ம் ஆண்டு 87 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment