மரடோனாவின் அதிரடியால் மெஸ்ஸி ஓய்வு!

Maradona_Messi_3374577bசர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஜன்ரீன கால்ப்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

கோபா கால்பந்துப் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நியூயோர்க்கில் நடைபெற்றது. இதில் நடப்பு சம்பியன்களான சிலியும் ஆர்ஜென்ரீனாவும் மோதின.

இதில் பெனால்டி சூட் அவுட் முறையில் சிலி 4-2என்ற கோல்கணக்கில் சம்பியனை வென்றது.

கடந்த ஆண்டும் இறுதிச் சுற்றில் சிலி-ஆர்ஜென்ரீன நாடுகளே மோதின. அதிலும் இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் சிலியே 4-2 என்ற கோல்கணக்கில் கோப்பையை வென்றது.

கால்பந்தாட்ட உலகின் தலைசிறந்த வீரராகக் கருதப்படும் ஆர்ஜென்ரீன அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸி, பிரேசிலின் பிலே, ஆர்ஜென்ரீனாவின் முன்னாள் கப்டன் டிகோ மரடோனா ஆகியோருக்கு இணையாக பேசப்படுபவர்.

ஆனால் அவர்களைப்போல் மெஸ்ஸியால் நாட்டுக்குக் கோப்பையை வென்றுகொடுக்க முடியவில்லை.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜேர்மனியிடமும், கடந்த கோபா அமெரிக்கப் போட்டியில் சிலியிடமும் தோற்றபோது அணியின் தலைவராக இருந்து விமர்சனத்துக்குள்ளானவர் மெஸ்ஸி.

இந்நிலையில், அண்மையில் நடந்த கோபா கால்ப்பந்தாட்டப் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றாவிட்டால் அந்த அணி வீரர்கள் எவரும் நாட்டுக்குள் நுழைய முடியாது என மரடோனா தெரிவித்து விட்டார்.

இந்நிலையிலேயே சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக லயனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

இறுதி ஆட்டத்தில் தோற்றதை நம்பமுடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. எனது ஓய்வு பலருக்கு பயனுள்ளதாக அமையும். பலர் விரும்பியுள்ளதால் எனது ஓய்வை அறிவித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.






Related News

  • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
  • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
  • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
  • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
  • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
  • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
  • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
  • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *