மராட்டியம் மாநிலம் மராத்வாடா பகுதியில் 8 நாட்களில் 34 விவசாயிகள் தற்கொலை

ekuruvi-aiya8-X3

Farmer-Suicides-மராட்டியம் மாநிலம் மராத்வாடா பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை எடுத்த கணக்கெடுப்பில் வறட்சி காரணமாக சுமார் 580 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் கடந்த 8 நாட்களில் மட்டும் 34 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இது குறித்து அவுரங்காபாத் பகுதி ஆணையாளர் கூறுகையில், 34 விவசாயிகள் கடந்த 8 நாட்களில் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை என கூறினார்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட 580 பேரில் 107 பேர் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அப்பகுதியில் போதிய மழையின்மையால் விவசாயம் மிகுந்த பாதிப்புக்குள்ளானது. அதனால் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் மொத்தம் 355 வட்டங்கள் உள்ளது. அவற்றில் 223 வட்டங்களில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 75 சதவீதம் கூட மழை பொழிய வில்லை. கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதாக மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை நாட்டில் அதிகரித்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment