இஸ்லாமியரை இந்து சமய பிரதி அமைச்சராக நியமித்தமை மோதல்களை உருவாக்கும்

ekuruvi-aiya8-X3

mano-ganesanஇந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமித்ததால், அது தேவையற்ற மோதல்களை மட்டுமே உருவாக்கும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று (12) ஐந்து பிரதி அமைச்சர்களும் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதற்கு இந்த மத அமைப்புக்கள் உட்பட இந்து மதத்தைச் சேர்ந்த பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment