வாக்களிக்க முடியாத சூழ்நிலை-மன்னிப்பு கோரினார் சூர்யா

Facebook Cover V02

surya_fb__largeதமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள் தங்களது ஓட்டுரிமையை நிறைவேற்ற வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார் நடிகர் சூர்யா. ஆனால் தேர்தலில் வாக்களிக்க அவர் சென்னையில் இல்லை. இதற்காக பொதுமக்களிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் நடிகர் சூர்யா வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் இருப்பதால் முதல்முறையாக வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இது தனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு தற்போது தன்னால் அதனை செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment