மார்க் ஸக்கர்பெர்க் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்!

Zuckerberg-apology-for-dividing-people-wonot-stopஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக முகநூலில்  ரஷ்யர்கள் பிரச்சாரம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் மார்க் ஸக்கர்பெர்க் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு சாதகமாக வாக்காளர்களின் மனநிலையை மாற்ற ரஷியர்கள் ஏராளமானோர் முகநூலில் பிரசாரம் செய்ததாக சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியதில் முகநூலில் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பெர்க் தனது பக்கத்தில், ‘மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக, அவர்களை பிளவுபடுத்தும் வேலைகளுக்கு எனது படைப்பு பயன்படுத்தப்பட்டு விட்டது. என்னால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல், மிகச்சிறப்பாக செயல்பட முயற்சி மேற்கொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

தான் மன்னிப்பு கோருவதற்கான காரணத்தை மார்க் ஸக்கர்பெர்க் நேரடியாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள எதிர்மறை விளைவுகளுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.


Related News

 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *