சவுதி அரேபியா மன்னரின் ஆடம்பர சுற்றுப்பயணம்

sdsd

Saudi-Arabia-King-Luxury-tour-in-indonesiaசவுதி அரேபிய மன்னர் தனது குடும்பத்தினர் மற்றும் 800 பிரதிநிதிகள், 572 பணியாட்களுடன் இந்தோனேசியா ஆடம்பர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சவுதி அரேபிய நாட்டின் மன்னர் மற்றும் அரசு குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.

அதிலும் இப்போதைய மன்னர் சல்மான்பின் அப்துல் அஜீஸ் எல்லோரையும் மிஞ்சும் மிகவும் ஆடம்பரமாக நடந்து கொள்கிறார். அவர் தற்போது இந்தோனேசியா, மலேசியா, சீனா, மாலத்தீவு, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக 9 நாள் சுற்றுப்பயணமாக நேற்று அவர் இந்தோனேசியா வந்தார். அதிநவீன சொகுசு விமானத்தில் அவர் தலைநகரம் ஜகர்தா வந்து இறங்கினார். மன்னர் சுற்றுப்பயணத்துக்காக ஏராளமான ஆடம்பர பொருட்கள் சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அவர் பயணம் செய்வதற்காக அவருடனேயே 2 மெர்சிடஸ் பென்ஸ் விலை உயர்ந்த கார்கள் வந்து இறங்கின. மேலும் 2 தானியங்கி லிப்டுகளும் கொண்டு வரப்பட்டன. இத்துடன் ஏராளமான அதிநவீன கருவிகளும் வந்து இறங்கின. மன்னருக்காக மட்டும் 459 டன் பொருட்கள் சவுதி அரேபியாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

மன்னருடன் 36 இளவரசர்கள் மற்றும் இளவரசிகள், 10 மந்திரிகள், 800 பிரதிநிதிகள் வந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், மன்னருக்கும், மன்னரின் குடும்பத்தினருக்கும் பணிவிடைகள் செய்வதற்காக 572 பணியாட்கள் வந்துள்ளனர். பிரதிநிதிகள், பணியாட்கள் என அனைவரையும் சேர்த்த மொத்தம் 1,500 பேர் மன்னருடன் இந்தோனேசியா வந்துள்ளனர்.

அவருடன் வந்தவர்கள் மற்றும் கொண்டு வரப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி வருவதற்காக மட்டும் 36 விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.E745B468-5E29-4F1E-BAB5-267DAF4FBB74_L_styvpf.gif

சில நாட்களுக்கு முன்பில் இருந்தே இந்த பொருட்கள் வந்து சேர்ந்தன. ஜகர்தாவில் உள்ள 3 பிரபல நட்சத்திர ஓட்டல்கள் முழுவதும் மன்னரின் குடும்பம் மற்றும் பிரதிநிதிகள் தங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அடுத்து பாலித்தீவில் உள்ள மிக ஆடம்பர ஓட்டலான புல்காரி ஓட்டலில் அவர் தங்க உள்ளார். இந்த ஓட்டலின் ஒரு அறையின் ஒரு நாள் வாடகை மட்டுமே 3½ லட்சம் ரூபாய். அந்த ஓட்டல் முழுவதுமே மன்னருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னரின் இந்த ஆடம்பர சுற்றுப்பயணம் இந்தோனேசிய மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. சவுதி அரேபிய மன்னர் ஒருவர் 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியா செல்வது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக முஸ்லிம்கள் கொண்ட நாடு இந்தோனேசியா. எனவே, இந்த நாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து மன்னர் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

Share This Post

Post Comment