மன்னார் பள்ளிமுனையில் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள காணி நில அளவை செய்யப்பட்டது!

ekuruvi-aiya8-X3

mannarமன்னார் பள்ளிமுனையில் கடற்படையினரின் வசமிருந்த மீனவர்க் குடும்பங்களுக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு முதல் கட்டமாக இன்று நில அளவை செய்யப்பட்டிருக்கின்றன.

நீதிமன்ற பணிப்பிற்கு அமைய பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் பத்தொன்பது மீனவக்குடும்பங்களின் வீடுகள் காணப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் மன்னார் மாவட்ட நீதிமன்றில் மக்களால் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் கடற்படையினர் காணியினை கையளிப்பதற்கு இணங்கியதன் அடிப்படையிலேயே இன்று நில அளவை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

நில அளவை செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் என்றும் அதன் பின்னரே காணி விடுவிக்கப்படலாம் என்றும் மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Post

Post Comment