5 மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை தகர்க்க தீவிரவாதிகள் சதித்திட்டம்..! உளவுத்துறை எச்சரிக்கை!!

airportசமீபத்தில் காஷ்மீர் உரியில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை அழித்தது.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலபேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வடமாநிலத்தை குறிவைத்துள்ள தீவிரவாதிகள், டெல்லி, காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் 5 மாநிலங்களில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்துள்ளனர் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை தாக்க கூடும் என்ற எச்சரிக்கையால் இந்த மாநிலங்களில் உள்ள 22 விமான நிலையங்களும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் தணை ராணுவப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This Post

Post Comment