மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

Thermo-Care-Heating

Donate-girlபெங்களூரில் வசிப்பவர் மதியழகன் (வயது 48). எலக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா (37).

இந்த தம்பதியினருக்கு பூமா (17) கார்த்திகா (15) என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் பூமா பிளஸ்-2 முடித்து பொறியியல் படிக்க இருந்தார்.

இவர்கள் 4 பேரும் பெங்களூரில் இருந்து பொள்ளாச்சிக்கு உறவினர் கிரக பிரவேசத்துக்கு காரில் சென்றனர்.

சித்தோடு பைபாசில் அந்த கார் சென்ற போது ரோட்டோரம் உள்ள மண் குவியலில் மோதி கார் கவிழ்ந்தது.

இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மயக்க நிலையில் இருந்த பூமாவை ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி பூமா மூளை சாவு அடைந்தார்.

இதற்கிடையே தங்களின் மகள் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர். அதன் படி மாணவியின் 2 கிட்னி, கல்லீரல், இதயம் மற்றும் நுரையீரல், 2 கண்கள் தானமாக எடுக்கப்பட்டது.

இதில் 2 கிட்னி ஈரோடு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் கோவைக்கும், நுரையீரல் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கல்லீரல், இதயம் மற்றும் நுரையிரல் ஆகிய உறுப்புகள் இன்று காலை 3 ஆம்புலன்சு மூலம் கோவைக்கு எடுத்து செல்லப்பட்டது. போக்குவரத்து போலீசார் ஆம்புலன்சு செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். கோவை விமான நிலையத்தில் இருந்து இதயமும், நுரையீரலும் விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ideal-image

Share This Post

Post Comment