மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

ekuruvi-aiya8-X3

students-protestஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவதற்கு நேற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தடையுத்தரவை மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அதேநேரம் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொள்ளுப்பிட்டிய சந்தியில் இருந்து காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Post

Post Comment