திருகோணமலையில் மாணவர்கள் பாடசாலை பகிஷ்கரிப்பில்!

ekuruvi-aiya8-X3

IBCTAMILokoதிருகோணமலை மாவட்டம் மல்லிகைத் தீவில் 6-8 வயது மாணவிகள் அறநெறி வகுப்புக்காக பாடசாலைக்குச் சென்றவேளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட தமிழ் பாடசாலை மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்கவேண்டுமென வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில், திருகோணமலை மாவட்ட மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்துள்ளனர்.

குறித்த பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் அதிபர்களும் மாத்திரமே பாடசாலைக்குச் சமூகமளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 5ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Post

Post Comment