தமிழ் மாணவர்கள் கடத்தல் விவகாரம் – சட்டமா அதிபருக்கு நீதிபதி கடிதம்!

Facebook Cover V02

attorney-general-720x4802008ஆம் ஆண்டு கொழும்பு தெகிவளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11பேர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தி பாதுகாப்பு அமைச்சுக்கு கோட்டை நீதிமன்ற நீதவான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹிவளை – பெர்னாண்டோ மாவத்தையில் ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் இராமலிங்கம், மொஹமட் நிலான், மொஹமட் சாஜித் ஆகிய மாணவர்களும், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடற்படையின் கடத்தல் குழுவொன்றினால் கடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அது தொடர்பான வழக்கு கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகின்றது.

கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 11பேரும் வெலிசறை, கோட்டை மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களிலுள்ள கடற்படையினரின் நிலத்தடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதா கவும் இவர்களது விடுதலை தொடர்பாக கப்பம் கோரப்பட்டதாகவும் விசாரணையின்மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான போதுமான சாட்சியங்கள் உள்ளதாக தெரிவித்த நீதிபதி லங்கா, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது பதில் கடிதத்தினை அடுத்த தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு தெரிவித்த நீதிபதி வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம்திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Share This Post

Post Comment