மனதுக்குள் கிடக்கு உயிர் கொல்லும் வலிகள்

ekuruvi-aiya8-X3

20525840_1908768906005931_1125258571684692671_n

தனிமையில் உழலும் தூரதேச வாழ்வில்
துயர்மிகு கனவுகள்
பலநாள் தூக்கம் கலைத்து விடும்

வெளியில் சொல்ல முடியாத
பல கவலைகள் ஆத்மாவை
கட்டிப்போடும் இரவுகளில்…

கனவுகளின் கொடூரமும்
களைத்துப்போன உடலை
உடைத்துப்போடும்

மனைவி பிள்ளைகள் பற்றிய கவலைகள்
ஒரு புறம்…….
தாயகம் பிரிந்த பெருவலி
மறுபுறம்….
வலிகளின் மேலே வலிகளை ஏற்றும்

அடுத்தவன் ஊருக்கு போகும் போது
புன்னகைக்கும் உதடுகள்
மறுகணம்…..
நாம் ஊர் போகும் நினைவுகளில்
ஏங்கும் மனம்

வீட்டுக் கஷ்டங்களை நினைத்தால்
நாட்டு நினைவுகள் மறந்துவிடும்
இருந்தாலும்
அடி மனதில் இளைப்பாறி
மீண்டெழும்

மாதச் சம்பளம் எடுத்தவுடன்
பணம் எம்மிடம் இல்லாவிடினும்
வீட்டுக்கு பணம் அனுவிட்டு
அது கிடைத்த அவர்களின் மகிழ்வில்
ஒரு மாதப் பசிகூட மறந்துபோகும்

பசிக்கிற வயித்துக்கு
பதில் சொல்ல வேண்டி
பெப்ஸி டப்பாக்களை
பொறுக்கி விற்பேன்

ஊரில் துச்சமாக
எண்ணிய வேலை தான் – ஆனால்
இங்கு இஷ்டப்படி செய்வேன்
அஞ்சி அஞ்சி உழைத்து
குடும்ப கஷ்டம் நீக்க….

நிதா கரன் கதிகரன்.

Share This Post

Post Comment