பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த இன்று சுஷ்மா சுவராஜ் மியான்மர் செல்கிறார்

ekuruvi-aiya8-X3

sushmaபிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரி்க்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. சுழற்சி முறையில் ரஷ்யாவிடம் இருந்து தற்போது இந்தியாவுக்கு சேர்மன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15-ந்தேதி முதல் பெறப்பட்ட இந்த பொறுப்பு வரும் டிசம்பர் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில், வரும் அக்டோபர் 15-16 தேதிகளில் 8-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை கோவாவில் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த இன்று (திங்கட்கிழமை) மியான்மர் செல்கிறார்.

ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சிக்கு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இந்தியா சார்பில் உயர் மட்ட அளவிலான பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ், மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ், ஆங் சான் சூகி, தேசிய ஆலோசகர் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

Share This Post

Post Comment