மலேசிய பிரதமர் நாளை சென்னை வருகை – பிரதமர் மகிழ்ச்சி

ekuruvi-aiya8-X3

Malaysian-PM-to-arrive-in-India-tomorrowமலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் அரசு முறைப் பயணமாக நாளை சென்னை வருகிறார். சென்னையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் 31-ம் தேதி டெல்லி செல்கிறார். ஏப்ரம் 1-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க இருக்கும் நஜீப் நசாக், இருநாட்டு உறவுகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில், தனது இந்தியப் பயணம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ,” 5 நாள் பயணமாக இந்தியா செல்ல இருக்கிறேன். இந்தியா 1957 முதல் மலேசியாவுடன் நெருங்கிய நண்பனாக உள்ளது. இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர் நோக்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மலேசியப் பிரதமரின் கருத்துக்கு பதிலளித்துள்ள இந்திய பிரதமர் மோடி ,” இந்தியா உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. உங்களது வருகை இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

malesiaa._L_styvpf

Share This Post

Post Comment