குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை மக்ரோனி செய்வது எப்படி

DSC05616
தேவையான பொருட்கள்
மக்கரோனி – 200 கிராம்
முட்டை – 2
தக்காளி – 1
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவைக்கு ஏற்ப
வெங்காயத்தாள் – 2
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
மிளகு தூள் – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 2 பல்
சோம்பு – ஒரு தேக்கரண்டி (பொடிக்கவும்)
பட்டை, இலவங்கம், ஏலக்காய் – தலா 1 (பொடிக்கவும்)
எண்ணெய் – தாளிக்க
news_22-05-2014_39mar
செய்முறை :
பட்டை, இலவங்கம், ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும் .
பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவேண்டும் .
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முட்டையை ஊற்றி நன்கு கிளறி விட்டு உதிரியாக வந்தவுடன் தனியாக கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .
மக்ரோனியை ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பதமாக வேக வைத்து இறக்கவேண்டும். வெந்த பின் குளிர்ந்த நீர் விட்டு அலசி தண்ணீரை வடித்து விட்டு ஒரு தட்டி கொட்டி வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
வாணலியில் எண்ணெய் விட்டு பொடித்த ஏலக்காய், பட்டை, இலவங்கம், சோம்பு சேர்த்து பொரிய விடவேண்டும். பொரிந்த பின் வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.
அனைத்து நன்றாக வதங்கியதும் தண்ணீர், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து காய்கள் வெந்ததும் மக்ரோனி சேர்த்து கிளறவும். தண்ணீர் முற்றிலுமாக சுண்டியதும் முட்டை கலவை சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான முட்டை மக்ரோனி தயார்.

Related News

 • பிஸிபேளாபாத் செய்து சுவைப்போமா?
 • ஹாங்காங் ஃப்ரைடு இறால் செய்வோமா?
 • சுவையான தால் ஸ்டஃப்டு பரோட்டா செய்வோமா?
 • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சீஸ் – நூடுல்ஸ் மசாலா சாண்ட்விச்
 • பஞ்சாப் ஸ்பெஷல் தாபா தால் தட்கா செய்வோமா?
 • சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
 • சுவையான மீல்மேக்கர் உப்புமா செய்வோமா?
 • சுவையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *