பொருத்து வீடா, கல் வீடா என்று மக்களின் விருப்பமறிந்தே தீர்மானம் – ரணில்!

Facebook Cover V02

ranilவடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில்,

பொருத்து வீடா, கல் வீடா என்பது தொடர்பில் மக்களின் விருப்பம் அறிந்தே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்து வீட்டுத் திட்டத்துக்கு வடக்கு மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அதனை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வேலைத் திட்டங்களை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையிலேயே, பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment