வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் யுத்தசூழல் உருவாகும்!

ekuruvi-aiya8-X3

rejinodkureவடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகும் என ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோலட் குரே தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டாம் திகதி ஐநா செயலர் பான்கிமூனுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே ஐநா செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார் என றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

மேலும், அசரஙாக்கம் வடக்கில், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், வறுமையை ஒழித்தல், வேலைவாய்ப்பை வழங்குதல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமெனவும் ஐநா செயலர் தெரிவித்தார்.

இவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் தம்மை எச்சரித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, இரண்டு இனங்களுக்கும் இடையில் காணப்படும் சந்தேக மனநிலையே பிரச்சனைக்குக் காரணம் எனத் தெரிவித்ததாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், இனப்பெருக்கத்தின்மூலம் தாம் சிறுபான்மை இனமாக்கப்படுவோம் என பெரும்பான்மையின மக்களுக்கும் தங்கள் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதன் ஊடாக தமது வாழ்விடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் சிறுபான்மை மக்களுக்கும் இருப்பதாகவும் பான் கீ மூனுக்கு எடுத்து விளக்கியதாகவும் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment