ஏழை மக்களிடம் பணமே இல்லாத பொருளாதரத்தை மோடி உருவாக்கி விட்டார்: ராகுல்

ekuruvi-aiya8-X3

Rahul_Gandhi-450x285பணமில்லா பரிவர்த்தனை என்று கூறி ஏழை மக்களின் கையில் பணமே இல்லாத பொருளாதரத்தை பிரதமர் மோடி உருவாக்கி விட்டார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், கவுதம் புத்தா மாவட்டத்திற்குட்பட்ட தாத்ரி நகரில் உள்ள பிரபல சந்தைப்பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் வெளியிட்ட ஒரு அறிவிப்பின் மூலம் நாட்டு ஏழை மக்களுக்கு எதிரான போரை மோடி தொடங்கி விட்டார். இந்த நடவடிக்கையால் தற்போது கருப்புப் பணம் அனைத்தும் வெள்ளையாகி வருகிறது.

நேர்மையானவர்கள் எல்லாம் நாட்டில் உள்ள வங்கிகளின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர். ஊழல்வாதிகளும், பணக்காரர்களும் வங்கிகளின் பின்வாசல் வழியாக பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.

ஏழை மக்களின் பணத்தை ஆறு அல்லது எட்டு மாதங்கள் வரை வங்கிகளில் முடக்கி வைக்கவும், அந்தப் பணத்தை கொண்டு பிரபல தொழிலதிபர்கள் வாங்கிய கடன்தொகையான 8 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளுக்கு செலுத்தவும் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை நாட்டை காயப்படுத்தி விடும்.

முதலில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார். இப்போது, கள்ளநோட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்கிறார். 100 ரூபாயில் 2 பைசா அளவுக்குதான் நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் உள்ளது.

மோடியின் இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாட்களுக்கு பின்னர் எல்லையோரம் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் கையில் புதிய ரூபாய் நோட்டுகள் காணப்பட்டது. ஆனால், நாட்டில் பணமில்லாத பொருளாதாரத்தை ஏற்படுத்தப் போவதாக மோடி கூறி வருகிறார். உண்மைதான், ஏழை மக்களிடம் பணமே இல்லாத ஒரு பொருளாதாரத்தை அவர் உருவாக்கி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Post

Post Comment