மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம்; ஹர்ஷ மஹிந்தவிடம் வேண்டுகோள்

ekuruvi-aiya8-X3

Harshaஉண்மையற்ற விடயங்களை கூறி மக்களை தவறாக வழிநடாத்த வேண்டாம் என்று குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம், பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான பதிவொன்றை பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) வெளியிட்ட அறிக்கை மூலமாக மீண்டும் உண்மைக்கு புறம்பான பல விடயங்களை கூறியிருப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

கல்வித் துறைக்கு வரி அறவிடப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும், அவ்வாறு வரி அறவிடப் போவதில்லை என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

ஆரம்பக் கல்வி முதல் மூன்றாம் நிலைக் கல்வி வரை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கும் புதிய வட் வரி திருத்தத்தினூடாக வரி அறவிடப்பட மாட்டாது என்று தெரிந்தும் கூட மஹிந்த ராஜபக்ஷ மக்களை தவறாக வழிநடாத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment