மக்களை பணயக் கைதிகளாக்கி மன்பிஜ் நகரில் இருந்து வெளியெறும் ஐ.எஸ்.

Thermo-Care-Heating

mediaitem9சிரியாவின் மன்பிஜ் நகரில் இருந்து பொதுமக்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தி ஐ.எஸ்.தீவிரவாதிகள் தப்பித்துச் செல்லும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களான இவை சிரியாவின் ஜனநாயகக் படைகளால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த புகைப்படங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நகர்ந்து செல்வது புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்களை தாம் செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதன் காரணமாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளவில்லை.

மன்பிஜ் நகரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் தீவிரவாதிகள் துருக்கியின் எல்லைப்பகுதிக்கு செல்வர் என்று ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த மக்கள் கூட்டத்துடன் கலந்து குறைந்தது நூறு தொடக்கம் இருநூறு வரையான ஐ.எஸ்.தீவிரவாதிகள் மன்பிஜ் நகரைவிட்டு வெளியேறியுள்ளனர் என கருதப்படுகின்றது.

எவ்வாறான போதும், கடந்த சில வாரங்களிற்கு முன்னர் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் மன்பிஜ் நகரை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment