கமல் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்

ekuruvi-aiya8-X3

sevalie_Kamalவிஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

அந்த நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.

அதில், கமலை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த கமல் தனக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார்.

இதனை தொடர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டு முன்பு எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர். கமல் வீட்டை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kamalhaasan-hindu1._Lஅப்போது அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரண மாக கமல் வீடு இருக்கும் பகுதியில் பரபரப்பு நிலவியது. அங்கு தொடர்ந்து போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.

Share This Post

Post Comment