முல்லை மக்களின் பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு – அனந்தி

Thermo-Care-Heating

ananthiமுல்லைத்தீவு மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு விஜயம் செய்து, மகளிர் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பலரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உட்பட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம், சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு பிரச்சினை தொடர்பில் மக்கள் தமது கருத்துக்களை வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனிடம் முன்வைத்திருந்தனர்.

குறித்த சந்திப்பில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் அவை தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தெரிவிக்கவுள்ளதாகவும், அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment