மன்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து மக்கள் வெளியேற்றம்

manchester-720x450மன்செஸ்டர் விமான நிலையத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று மீட்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேற்படி சம்பவத்தை அடுத்து கிரேட்டர் மன்செஸ்டர் பொலிஸார், சிறப்பு குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அங்கு நிலைமையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment