மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட அரசியல் கைதி ஒருவர் திடீர் மரணம்!

Facebook Cover V02

jejilபயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதி ஒருவர் இன்று திடீர் மரணமடைந்துள்ளார்.

வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் குணரத்ன கஜவீர என்ற கைதியே உயிரிழந்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு காலி துறைமுகத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குணரத்ன கஜவீர கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குணரத்னவின் மனைவியான 63வயதுடைய வைரமுத்து சரோஜாதேவியும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு குணரத்ன கஜவீரவின் 44 வயதான பந்துல கஜவீர என்ற மகனும், குணரத்ன கஜவீரவின் 45 வயதான மருமகன் அஜித் நிஜாந்த எதிரிசிங்க ஆகியோரும் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குணரத்னவின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share This Post

Post Comment