மைத்திரியுடன் மகிந்த இணைய விருப்பம் – போர்க்குற்ற விசாரணையைக் கைவிடத் தீர்மானம்!

mahintha & maithiriIசிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக மகிந்த ராஜபக்ஷ தரப்பினால் சிறீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் சில யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையடுத்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து மகிந்தராஜபக்ஷவும் அவரது விசுவாசிகளும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக்கொண்டு எதிர்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை மைத்திரி அரசாங்கத்துக்கெதிராக பல்வேறு போராட்டங்களை நடாத்திவருவதுடன், தனியாகப் பிரிந்துசென்று புதிய கட்சியை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

கடந்த மேதினக்கூட்டத்தின்போது மகிந்த தரப்பின் இத்தகைய முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மைத்திரி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட மகிந்த தரப்பு விரும்பம் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும் இடையிலான இணக்கப்பாட்டைக் கொண்டுவருவதற்கு சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கடும் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர்.

தற்போது ஆட்சி செய்யும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவும் மகிந்த தரப்பு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஐக்கியதேசியக் கட்சியின் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளும் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள மகிந்த தரப்பு அதற்கு சில யோசனைகளையும் முன்வைத்துள்ளது.

இதில் சீனாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொண்டு பொருளாதார அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் படையினர் தொடர்புபட்ட விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் உட்பட முக்கியமாக பத்து யோசனைகளை மஹிந்த அணி முன்வைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களுக்காக சிறையிலடைக்கப்பட்ட படையினர் அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளை பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவேண்டும்.

யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முழுமையாக புறக்கணிப்பதுடன், யுத்தத்துடன் நேரடியாக தொடர்புபடாத மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக உள்நாட்டு விசாரணைக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் மஹிந்த அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக கலந்தாலோசனை நடாத்தவும், 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை முழுமையாக பகிரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

போன்ற யோசனைகள் மகிந்த தரப்புக் கூட்டு எதிரணியினரால் மைதிரிபால சிறிசேனவுக்கு முன்வைக்கப்பட்டன.






Related News

  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • நம்பிக்கைக்குரிய தலைவர் மஹிந்த மட்டுமே
  • இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது
  • பரந்த கூட்டணியொன்றை உருவாக்கி களமிறங்குவோம் – நாமல்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர்
  • ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *