மே 18 முல்லைத்தீவுக்கு பயணம் செய்யவுள்ளார் மைத்திரி!

maithi458சிறிலங்கா அரசாங்கத்தினால் இனவழிப்பு மேற்கொள்ளப்பட்ட மே 18 ஆம் நாள் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பயணம் செய்யவுள்ளார். தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்திற்காக இவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா அரசாங்கம் 2017ஆம் ஆண்டை தேசிய வறுமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்கலாம் என்பது தொடர்பில் பேசப்பட்டுள்ளதுடன் இந்த நிகழ்வை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பத் திகதி, மே 18 என்று பின்னர்தான் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தில் சிறிலங்கா அரசாங்கத்தினால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட நினைவுநாளான மே 18 இந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்கு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் செய்யவிருப்பதும் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Post

Post Comment