வடக்கில் மைத்திரி தலைமையில் தமிழ்மொழித் தின விழா!

ekuruvi-aiya8-X3

maithi458இந்த வருடத்துக்கான தமிழ்மொழித் தின விழா சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்பொன். இராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 14ஆம், 15 ஆம் நாட்களில் யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சு வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆராய வடக்கிற்கு பயணம் செய்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், வடமாகாண கல்வி அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின்போது, தமிழ்மொழித் தினத்தை சிறப்பாகச் செய்வதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்யுமாறு இராதாகிருஷ்ணன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் நிகழ்வு நடைபெறவுள்ள யாழ். இந்துக் கல்லூரியின் மைதானத்திற்குச் சென்று நிலமைகளையும் ஆராய்ந்தார்.

அத்துடன், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ள மைத்திரிபால சிறிசேன தமிழ்மொழித் தினப் போட்டியில் வெற்றியீட்டிய 325 மாணவர்களுக்கும் தனது கரங்களால் சான்றிதழ் வழங்கவுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment