மகிந்தவின் இணைப்புச் செயலாளர் 1.1கிலோ தங்கத்துடன் சிக்கினார்!

ekuruvi-aiya8-X3

arrestசிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரான சம்பிக்க கருணாரத்ன 1.1கிலோகிராம் தங்கத்துடன் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷ அதிபராக இருந்தபோது அவரது இணைப்புச் செயலாளராக கடமையாற்றிய சம்பிக்க கருணாரத்ன அரசுத்துறை நிறுவனங்களான துறைமுக அதிகாரசபை, தேசிய லொத்தர் சபை ஆகியவற்றில் பதவிகளை வகித்து, அரச சொத்துக்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் சம்பிக்க கருணாரத்ன கடந்த நவம்பர் மாதம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டார்.

Share This Post

Post Comment