உள்ளூராட்சித் தேர்தல்: அநுராதபுரத்தில் ஆரம்பிக்கிறார் மகிந்த

ekuruvi-aiya8-X3

mahinda-padayathra-1முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பமாகவுள்ளன.
எதிர்வரும் 12ஆம் திகதி புனித நகரான அநுராதபுரவில் உள்ள சல்காடோ மைதானத்தில் முதலாவது பரப்புரைக் கூட்டம் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கூட்டு எதிரணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன முன்னணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளனர் என்று அந்தக் கட்சியின் பரப்புரைப் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமன்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடு முழுவதிலும் தாமரை மொட்டு சின்னத்தில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெவித்தார்.

Share This Post

Post Comment