நிபந்தனையுடன் மைத்திரியோடு பேச தயாராகிறார் மகிந்த!

Thermo-Care-Heating

Maithiripala-Mahinda-620ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனையவர்களுடன் பேச மகிந்த ராஜபக்ச தயாராக இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரம், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டால், பேச்சுக்களை நடத்த தயாராக இருக்கிறார் என மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்டும் என்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கோரி வருகின்றது.

அத்துடன், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் பேசத் தயாராக இல்லை என்றும், அதன் கொள்கைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment