ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மாத்திரமே முடியும் – மஹிந்த அமரவீர

ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ தனியான தனித்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் மக்கள் பலம் இல்லையென அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாத எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை விட பிரபலமான நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவது என்றால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் மாத்திரமே முடியும் என்று அவர் கூறியுள்ளார்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *