மகேஷ்பாபு படத்திற்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

Facebook Cover V02

AR-Murugadoss-Mahesh-babu-movie-gets-English-titleஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் புதிய படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளது.

‘கத்தி’ படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபுவை வைத்து பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு அறிவிக்கப்படாமலேயே இருந்தது மகேஷ் பாபுவின் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை கொடுத்தது. இதனால் இயக்குனர் முருகதாஸ் மீது அவர்கள் மிகவும் அதிருப்தியில் இருந்து வந்தனர். விரைவில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை அறிவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிடப்போவதாக முருகதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் தலைப்பாக ‘ஸ்பைடர்’ (SPYder) என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதன்படியே, படத்தின் தலைப்பையும் அதற்கேற்றபடி கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகிவருகிறது. இரண்டு மொழிகளிலும் ஒரே தலைப்பைத்தான் பயன்படுத்தப்போவதாக சமீபத்தில் படக்குழு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. அதன்படி, இந்த தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழக அரசு அளிக்கும் வரிச்சலுகை இந்த படத்திற்கு கிடைக்காது. எனவே, தமிழில் இப்படத்தின் தலைப்பு மாறினாலும் மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment