அர்ஜூன் மகேந்திரன் நாட்டைவிட்டுத் தப்பியோட்டம்!

Mahendranமத்திய வங்கியின் திறைசேரி பிணை முறி பத்திர முறைகேடு தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிறீலங்காவிலிருந்து தப்பியோடிவிட்டார்.

சிறீலங்கா நேரப்படி நேற்றையதினம் 3.12 மணியளவில் சிங்கப்பூருக்குப் புறப்படும் இ.கே.348 விமானத்தில் அவர் சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரும் ஜே.வி.பி இன் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைக்கு மாற்றீடாக மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்னர் திட்டமிட்டிருந்தது.

எனினும், பிணை முறி மோசடியிலிருந்து அர்ஜூன் மகேந்திரனைக் காப்பாற்றவே ஐக்கியதேசியக் கட்சி புதிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவிருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் ஏகமனதாக கோப் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

Share This Post

Post Comment