அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பியுள்ளார்

Thermo-Care-Heating

Arjuna-Mahendran-640x4001மத்தியவங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இன்று நாடு திரும்பியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் இவர்மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைக்காக நியமிக்கப்பட்ட கோப் குழு நாடாளுமன்றில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மத்தியவங்கி பிணை முறி விற்பனையில் மத்திய வங்கி ஆளுநர் ஈடுபட்டுள்ளமை கோப் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான அர்ஜூன் மகேந்திரன் நாட்டை வந்தடைந்ததும் அவரைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகவேண்டுமெனவும் கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ideal-image

Share This Post

Post Comment