உண்மையான வளர்ப்பு மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே…முதல்வர் ஜெயலலிதா ஏக்கம்…

ekuruvi-aiya8-X3

jeya34345சுதாகரனை முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று சொன்னாலும்..உண்மையான வளர்ப்பு மகனாக அறியப்படுபவர் தற்போதைய ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓவா- ன விவேக் ஜெயராமன் தான்.

இவர் கைக்குழந்தையாக இருந்தபோது, ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தை இவரது அப்பா ஜெயராமன் கவனித்துக் கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.

இதனால்,குழந்தைகளோடு ஜெயராமனின் மனைவி இளவரசியை போயஸ் கார்டனுக்குள் ஜெயலலிதா அழைத்துக் கொண்டார். சிறு வயதிலிருந்தே வளர்த்த பிள்ளை என்பதால் ஜெயலலிதாவுக்கு
விவேக் மீது ரொம்ப பிரியம் உண்டு.

மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீர்த்தனாவை மணந்துக் கொண்டுள்ள விவேக் திருமணத்திற்கு போக வேண்டாம் என்று உளவுத்துறை சொன்னதாம்.

அத்தோடு , மண்பெண்ணின் அப்பா பாஸ்கரன் மீது செம்மரக்கடத்தல் வழக்குகள் இருக்கின்றன என்ற விவரமும் சொல்லப்பட்டு இருக்கிறது.அதனால்..முதல்வர் கலந்துக்கொள்ளாமல் ஏக்கப்பட்டார் என்கிறது போயஸ் வட்டாரம்.

vivek-450x263

Share This Post

Post Comment