மட்டு நகரில் ஜனவரி 21 இல் மாபெரும் ‘எழுக தமிழ்’ பேரணி

ekuruvi-aiya8-X3

மீன் பாடும் தேன் நாடாம் மட்டு நகரில் ஜனவரி 21 இல் மாபெரும் ‘எழுக தமிழ்’ பேரணி – அனைவரும் ஒன்று கூடி இவுலகுக்கு எமது உரிமையை எடுத்து கூறுவோம் !!

கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரே இடத்தில் முன்வைக்கு நோக்குடன் எழுக தமிழ் பேரணி சனவரி 21 நாள் முன்னெடுக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை நிறுத்தக் கோரியும், சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்தக் கோரியும், தமிழ் மக்களுடைய ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க்கும் நோக்குடனும், ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேறக் கோரியும், தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புக்கு அனைத்துலக விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு வலியுறுத்தியும், இனப் பிரச்சினைக்கு தீர்வு கோரியும் இவ் எழுக தமிழ் பேரணியானது நடத்தப்படவுள்ளது.

ஆகவே இத்தகவலை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் சமூக வலைத் தளங்கள் ஊடகப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைவரும் இப்பேரணிக்கு ஆதரவு தந்தது எமது உரிமையை பெற அணிதிரள்வோம் !!15391318_1186233451467771_8325735598820816753_o

Share This Post

Post Comment