காவிரியா மெரினாவா எது முக்கியம்? தமிழக அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

Facebook Cover V02

merina2404காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்த சென்னை மாநகர காவல்துறை, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை என கூறியிருந்தது. அதிகளவில் பொதுமக்கள் கூடும் போது பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “காவிரி விவகாரத்தில் உரிமை கோருவதை விட மெரினா கடற்கரையை பராமரிப்பதுதான் முக்கியமா?” என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், “போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு உரிமை உண்டு. கட்டுப்படுத்த இல்லை” எனவும் கூறினர்.

“பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை எனவே பண்டிகையை தடை செய்ய வேண்டும் என கோர முடியுமா?” என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். அய்யாக்கண்ணும் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Share This Post

Post Comment