ஜனவரி 21 மட்டக்களப்பில் எழுக தமிழ் மாபெரும் பேரணி!

ekuruvi-aiya8-X3

eluka-tamilகிழக்கு மாகாணத்து மக்கள் தமது பிரச்சனைகளை ஒரே இடத்தில் முன்வைக்கும்பொருட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் ‘எழுக தமிழ் பேரணி’ நடாத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீட்கும் நோக்குடன் ஆக்கிரமிப்புப் படைகளை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறக்கோரியும் குறித்த பேரணி நடைபெறவுள்ளது.

அத்துடன், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், இனப்பிரச்சனைக்கான தீர்வினை இழுத்தடிப்புச் செய்யாது விரைவுபடுத்தவேண்டுமெனவும் இப்பேரணியில் வலியுறுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment