மடகாஸ்கரை தாக்கிய ‘அவா’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

Facebook Cover V02

Madagascar-cyclone-death-toll-hits-51ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மடகாஸ்கரில், கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் ‘அவா’ புயல் தாக்கியது. இதனால் மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதில் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகின.

இந்த புயலில் சிக்கி 29 பேர் வரை பலியானதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 22 பேரை காணவில்லை என அரசு அறிவித்து உள்ளது.

இதைப்போல 54 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய விபத்து மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடகாஸ்கர் தீவு அடிக்கடி புயலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்கிய ‘எனாவோ’ புயலுக்கு 78 பேர் பலியானார்கள்.

Share This Post

Post Comment