மெக்சிகோ அதிபர் தேர்தல் – புதிய அதிபராக லோப்பஸ் ஒப்ராடர் தேர்வு

Lopez-Obradorலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடக்கிறது. அங்கு நிறுவன புரட்சிகர கட்சி (பி.ஆர்.ஐ.) சார்பில் அதிபராக இருக்கும் என்ரிக் பினா நியட்டோவின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, அதிபர் தேர்தலுடன் இணைந்து நாடாளுமன்றம், மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மெக்சிகோவில் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது என்பதால் இந்த தேர்தலில் அதிபர் நியட்டோவால் போட்டியிட முடியவில்லை. எனவே அவரது கட்சி சார்பில் ஜோஸ் அன்டோனியோ மீட்டும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய நடவடிக்கை கட்சி (பான்) சார்பில் ரிகார்டோ அனயாவும் களத்தில் உள்ளனர்.
இதைப்போல இடதுசாரி கூட்டணி தலைவரும், மெக்சிகோ சிட்டியின் முன்னாள் மேயருமான ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடரும் (அம்லோ) போட்டியில் உள்ளார். இவர் கடந்த 2 தேர்தல்களில் இரண்டாம் இடம் பெற்றவர் ஆவார்.  இந்த தேர்தலுக்கான பிரசாரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தொடங்கியது.
இந்த பரபரப்பான சூழலில் மெக்சிகோவில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்தநிலையில்,  இடதுசாரி கூட்டணி தலைவரும், மெக்சிகோ சிட்டியின் முன்னாள் மேயருமான ஆண்ட்ரேஸ் மனுவல் லோப்பஸ் ஒப்ராடர்  மெக்சிகோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மக்கள் பெனா நொய்டாவின் ஆட்சியை தூக்கி எறிந்துள்ளனர். அத்துடன் தனது வெற்றியால் கடந்த ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்டு வந்த இரு கட்சிகளை லோப்பஸ் ஒப்ராடர் வெளியேற்றி உள்ளார். இனி வன்முறை, ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என லோப்பஸ் ஒப்ராடர் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் 2–வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாகவும், அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மெக்சிகோ திகழ்கிறது.
சமீபத்திய எண்ணெய் விலை வீழ்ச்சி, டாலருக்கு எதிரான பண மதிப்பு வீழ்ச்சி மற்றும் நாட்டில் புரையோடி இருக்கும் ஊழல் கறைகளால் மெக்சிகோவின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது.
40 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்.
இந்த பேரழிவில் இருந்து மெக்சிகோவை மீட்டு முன்னேற்றப்பாதையில் நடத்திச்செல்வேன் என லோப்பஸ் ஒப்ராடர் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
 • சோமாலியாவில் குண்டுவெடிப்பு; துப்பாக்கிச்சூடு – 20 பேர் கொன்று குவிப்பு
 • அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்தால் தஞ்சம் கோர முடியாது – டிரம்ப் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு
 • ஐரோப்பாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவ தயார் – டிரம்ப்
 • அமெரிக்க மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாக பரவுகிறது – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *