6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு

ஜப்பானைச் சேர்ந்த கிரேசி இண்டெர்நேஷனல் என்ற திருமணங்களை நடத்தி வைக்கும் நிறுவனம் இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 5 நாட்களின் இரவில் 6 மணி நேரம் முழுமையாக தூங்க வேண்டும். இதற்காக பிரத்யேகமான செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு நம்முடைய தூங்கும் நேரத்தை அது கணக்கிடும். 6 மணி நேரத்தை சரியாக பூர்த்தி செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளி வழங்கப்படும்.

 புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனத்துக்கு சொந்தமான உணவகத்தில் ஆண்டுக்கு ரூ 42 ஆயிரம்   வரையிலும் உணவு உட்கொள்ளலாம் என்றும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கிரேசி இண்டெர்நேஷ்னல் நிறுவனத்தினர், சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி ஆண்கள், பெண்கள் என 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் 92 சதவீதம் பேர் இரவு சரியாக தூங்குவதில்லை.

அதிகமானோர் செல்போனில் மூழ்கி தூக்கத்தை இழப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சரியாக தூங்காத ஊழியர்களால் அலுவலக வேலைகள், தொழிற்சாலை தயாரிப்புகள் பாதிப்படுகிறது. அதனால் தூக்கத்தின் தேவையை உணர்த்த இது மாதிரியான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.


Related News

 • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
 • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
 • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
 • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
 • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
 • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *